திடீர் சாலை மறியல் ! தண்ணீர் பற்றாக்குறை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
Sudden road blockade Citizens protest against water shortage
தர்மபுரி ஏரியூர் அடுத்த நாகமரை மேல்காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததால்,குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமமடைந்தனர்.

மேலும் குடிநீர் தேவைக்கு அருகிலுள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அங்கு தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். ஆனால் அரசாங்கத்தால் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் நாகமரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த தகவலறிந்து வந்த ஏரியூர் காவல் துணை ஆய்வாளர் மக்களிடையே சென்று போராட்டத்தை விடுக்க கோரி பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உறுதியினை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கூட்டத்தை கலைத்துக்கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு,பரபரப்பு நிலவியது.
English Summary
Sudden road blockade Citizens protest against water shortage