மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி - வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இப்பொழுது மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் திமுக எம்.பி, டி.ஆர் பாலு மற்றும் திருச்சி சிவா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "நீட் தேர்வு குறித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த பட்ஜெட்டில் சரியாக நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை செய்யக்கோரி திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு உரிய நிதியை மாநிலங்களுக்கு கொடுப்பதை விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SU Venkatesan Condemn to Central Govt RSS


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->