நாளை மறுநாள் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை: சென்னை கலெக்டர் எச்சரிக்கை!
Strict action if liquor is sold the day after tomorrow Chennai Collectors warning
சென்னை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதேபோல் தமிழகத்திலும் அணிவகுப்பு மரியாதை உடன் முதலமைச்சர் கோட்டையில் கொடியேற்றுவார். நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:15.8.2025, வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் இயங்காது.இதேபோல (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் / மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.15.8.2025 (வெள்ளிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Strict action if liquor is sold the day after tomorrow Chennai Collectors warning