தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை: நாளை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்!
state education policy for Tamil Nadu CM Stalin
தமிழகத்தின் புதிய மாநிலக் கல்விக் கொள்கை நாளை (ஆகஸ்ட் 8) முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக அரசு 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து, தமிழ்நாட்டுக்கே உரித்தான கல்விக் கொள்கை உருவாக்கப்படுவதாக அறிவித்தது. அதன்படி, கல்வியாளர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 2022-ல் அமைக்கப்பட்டது.
இந்த குழு, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க 650 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை கடந்த ஜூலை மாதம் முதல்வரிடம் வழங்கியுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய பரிந்துரைகள்:
* 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வேண்டாம்
* தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்
* மாணவரின் தனித்திறனுக்கு ஏற்ப பாடத்திட்டம் அமைய வேண்டும்
* அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே தர வேறுபாடு குறைய வேண்டும்
இத்தகைய பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் கல்வி துறைக்கு ஒரு தனித்துவமான திசையை வழங்கும் வகையில், மாநிலக் கல்விக் கொள்கை நாளை வெளியீடாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
state education policy for Tamil Nadu CM Stalin