So Called கம்யூனிஸ்ட்டுகளுக்கு கூச்சமோ, வெட்கமோ இல்லை! மானங்கெட்டவர்கள்! கடுமையாக விமர்சித்த இடும்பாவனம்!
NTK Idumbavanam karthi DMK MK Stalin CPIM
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தூய்மைப்பணியாளர்களைத் துளியும் மதித்திடாத ஒரு அரசின் தலைவரை மேடையேற்றுகிறோமே? என So Called கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கூச்சமோ, வெட்கமோ இல்லை.
மழையிலும், வெயிலிலும் வீதியில் கிடந்துப் போராடும் தூய்மைப்பணியாளர்களுக்கு நியாயம் செய்யாது, 'கம்யூனிசம் குறித்துப் பேசுகிறோமே?' என ஸ்டாலினுக்கும் குற்றவுணர்வோ, உறுத்தலோ இல்லை. மானங்கெட்டவர்கள்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், தூய்மைப்பணியாளர்களைத் துளியும் மதித்திடாத முதல்வர் ஸ்டாலினை வைத்து, 'சோசலிசக் கியூபாவை மீட்போம்' எனும் தலைப்பில் கூட்டம் நடத்தி, அதில் கம்யூனிசம் குறித்தும், சோசலிசம் குறித்தும் ஸ்டாலின் பேசும்போது, கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள் So Called கம்யூனிஸ்டுகள்.
இச்சமயத்தில், பெரியார் ஈவெரா தனது இறுதி உரையில் கம்யூனிஸ்டுகள் குறித்துக் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
"இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் என்ன பண்ணுகிறான்? பொறுக்கித் தின்கிறான்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
NTK Idumbavanam karthi DMK MK Stalin CPIM