அராஜகத்திற்கும், அநியாயத்திற்கும் பெயரெடுத்தவர் அந்த ஸ்டாலின். அவ்வகையில் நீங்கள் ஸ்டாலின் தான் - பாஜக பதிலடி!
BJP Narayanan Thirupathy Condemn to DMK Govt mk stalin
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பல நாட்களாக போராடும் துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண துப்பில்லாத திராவிட மாடல் தமிழக அரசு, காவல் துறையினரை பாஜகவின் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி அவரை வெளியே செல்ல விடமால் தடுத்திருக்கக் கூடிய செய்திருக்க கூடிய கொடூர செயல் வன்மையாக கண்டிக்கத்தது.
மக்கள் நலன் கருதி பணியாற்றுபவர்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்க நினைப்பது சர்வாதிகார செயல் மட்டுமல்ல, ஜனநாயக விரோதமும் கூட. நேற்று தான் திமுகவினர் 'பாதி கம்யூனிஸ்டுகள்' என்று கூறியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
சமீபத்தில் கேரளாவிலும் இதே போன்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க கடும் நெருக்கடிகளை கொடுத்தது கம்யூனிஸ்ட் அரசு. அதை பின்பற்றியே சென்னையிலும் துப்புரவு தொழிலாளர்களை தூக்கியடிக்க துடிக்கிறது தமிழக அரசு.
துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்த பாஜகவினரின் மீது காவல்துறையினரை ஏவி தாக்குதல் நடத்தியது கம்யூனிஸ்ட் அரசு. அதே பாணியில் தமிழக பாஜக மூத்த தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களையும் ஒடுக்க நினைக்கிறது தமிழக அரசு.
என் பெயரே ஸ்டாலின் என்றீர்களே முதலமைச்சர் அவர்களே, புரட்சியாளராக தன்னை சொல்லிக்கொண்ட ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் சர்வாதிகாரியாக மாறியது உலகம் அறிந்தது, ஆம்! நீங்கள் ஸ்டாலின் தான்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் மற்றுமொரு பதிவில், "திமுகவுக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமான உறவு தேர்தலுக்கானது அல்ல. எங்களில் பாதி கம்யூனிஸ்டுகள். என்னுடைய பெயரே ஸ்டாலின்" : ஸ்டாலின்.
தேர்தலுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன சம்பந்தம்?அடக்குமுறைக்கும், அராஜகத்திற்கும், அநியாயத்திற்கும் பெயரெடுத்தவர் அந்த ஸ்டாலின். அவ்வகையில் நீங்கள் சரியே!" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to DMK Govt mk stalin