சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியா வருகிறார்: எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல்..!
Chinese Foreign Minister Wang Yi is coming to India
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது.இதன் போது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர்களான வெளியுரத்துத்துறை அமைச்சர்ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், இம்மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினை ஆகியோரை மோடி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் பாராளுமன்றத்தில் கூறுகையில், சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், ஹிமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Chinese Foreign Minister Wang Yi is coming to India