இத்தாலி அருகே பெரும் துயரம்: 100 பேருடன் சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கி, 20 பேர் பலி: பலரை காணவில்லை..! - Seithipunal
Seithipunal


இத்தாலியத் தீவு ஒன்றில் 100 அகதிகளுடன் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில், 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  மேலும் பலரை காணவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்நாட்டு போர் நடப்பதால்,ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்கின்றனர். உயிர் பிழைக்கவேண்டும் என்று படகுகளில் மூலம்  செல்லும் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்து வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. அத்துடன், கணக்கில் வராதோர் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில் லிபியாவில் இருந்து 92 முதல் 97 பேர் வரை படகு ஒன்றில் இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர். அப்போது, லம்பேடுசா பகுதியில் அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியுள்ளது.  இதில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இவர்கள் எத்தனை நாட்கள் கடல் வழியாக பயணித்தார்கள்என்ற தகவலும் இதுவரை வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 dead many missing as migrant boat carrying 100 people sinks near Italy


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->