உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
Stalins project camp with you Minister Geethajeevans inspection
தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டு வரும் சத்துணவின் தரம் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை துவக்கிவைத்தார்.அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் துவக்கி வைத்தார்.
இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40, 46 மற்றும் 47-வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில் 72 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட மொத்தம் 1,991 விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி குறுகிய காலத்தில் விண்ணப்ப மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர் ரெக்சிலின், வட்டச் செயலாளர்கள் டென்சிங், லியோ ஜான்சன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டு வரும் சத்துணவின் தரம் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
English Summary
Stalins project camp with you Minister Geethajeevans inspection