பணம் கொடுத்து தான் சேர்மன் ஆயிருக்கோம் - வைரலாகும் திமுக தங்கையின் வீடியோ.!
spending 20 lakhs of buy chaireman posting kezhakarai chairman sister vedio viral
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை நகராட்சி திமுக தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கமிஷன் பிரிப்பதில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சேர்மனின் தங்கை ஹமிதா கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில்,சேர்மனின் தங்கை ஹமிதா, ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 10 லட்சம், 20 லட்சம் கொடுத்து சேர்மன் ஆயிருக்கோம். மாவட்ட செயலாளர், தலைவர் என்று அனைவருக்கும் பணம் கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் செலவழிச்சு இருக்கேன். கமிஷனை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என்று மிகவும் ஆவேசமாக பேசியது வைரலாகி வருகிறது.
கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்துத்தான் சேர்மன் ஆனதாக அவரது தங்கை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ள நிலையில் கீழக்கரை திமுக சேர்மன் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
spending 20 lakhs of buy chaireman posting kezhakarai chairman sister vedio viral