மின்சார ரெயில்கள் ரத்து - சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை - கடற்கரை மற்றும் எழும்பூருக்கு இடையேயான நான்காவது ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, நாளை காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

இதன் காரணமாக, தாம்பரம் - கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. 

இந்தப் பனி நிறைவடைந்தவுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மின்சார ரெயில் ரத்து செய்யப்படுவதன் காரணமாக, போக்குவரத்து கழகம் சார்பில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

அதாவது, பிராட்வே - தாம்பரம் இடையே 25 சிறப்பு பேருந்துகளும், பிராட்வே - கிளாம்பாக்கம் இடையே 20 சிறப்பு பேருந்துகளும் பல்லாவரம் - செங்கல்பட்டு இடையே 5 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special bus run in chennai for electric train cancelled


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->