சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளிகளின் கதி என்ன?
six peoples injured for firecrackers factory blast in sathur
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுமார் எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. அடுத்தடுத்து ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் பலத்த காயமடைந்தனர். தற்போது இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கிடையே இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples injured for firecrackers factory blast in sathur