நண்பர்களுக்கு படுக்கையறை வீடியோவை அனுப்பியதாக புகார்: 'மனைவி தான் சைக்கோ மாதிரி தினமும் உல்லாசத்துக்கு அழைப்பார்'; கணவன் பரபரப்பு தகவல்..! - Seithipunal
Seithipunal


பெங்களூரு புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 32 வயது பெண் ஒருவர் தனது கணவர் படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை  வீடியோ பதிவு செய்து அவரது நண்பர்களுக்கு பகிர்ந்ததாக பரபரப்பு குற்றசாட்டை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவரான 35 வயதான சையது இனாமுல் மீது போலீசார் நடவடிக்கை வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில் தன் மீது தன்னுடைய மனைவி அளித்த புகாரை சையது இனாமுல் முற்றிலுமாக மறுத்துள்ளதோடு, அது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடுகையில், 'எனக்கு 02 திருமணம் ஆகவில்லை, ஒருமுறை தான் திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மனைவி தான். வேறு எந்த பெண்களுடனும் எனக்கு தொடர்பு இல்லை. என் மனைவி தான் என்னிடம் இருந்து ரூ.17 லட்சம் வாங்கியுள்ளார். என் மனைவிக்கு நான் தான் ரூ.13 லட்சம் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்திற்கு பிறகு தினமும் என்னை தாம்பத்தியத்தில் ஈடுபட என் மனைவி வற்புறுத்துவார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு மனநோயாளி போல் நடந்து கொள்வார். என் மனைவி தான் என்னை அதிக அளவில் சித்ரவதை செய்து வந்தார்.' என்று சையது இனாமுல் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband says wife invites him for sex every day like a psycho


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->