"எதிர்பார்த்ததைவிட அதிக நீக்கம்": SIR குறித்து உதயநிதி ஸ்டாலின் கவலை!
SIR DMK Udhayanidhi Stalin
சென்னை மெரினா கடற்கரை அருகே ரூ. 86.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவு நேரக் காப்பகத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
97 லட்சம் வாக்குகள் நீக்கம்:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாகச் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
SIR திட்டத்திற்கு எதிர்ப்பு: "ஆரம்பத்தில் இருந்தே எஸ்.ஐ.ஆர் (SIR) திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். பீகார் போன்ற மாநிலங்களைப் போலவே இங்கும் இத்திட்டத்தின் மூலம் அதிகப்படியான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது," என அவர் குற்றம் சாட்டினார்.
திமுக-வின் களப்பணி:
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள் மற்றும் இடம் மாறியவர்களை மீண்டும் சேர்க்க மாவட்டச் செயலாளர்களுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக வாக்குச்சாவடி முகவர்கள் (Booth Agents) பொதுமக்களுக்குப் படிவங்களை நிரப்பவும், உரிய உதவிகளைச் செய்யவும் களத்தில் இருப்பார்கள் என அவர் உறுதியளித்தார்.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு:
தங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்துகொள்ள மக்களுக்குத் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
கால அவகாசம்: விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 18-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
English Summary
SIR DMK Udhayanidhi Stalin