மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அதிர்ச்சி..! திருடன்... திருடன்... என அலறிய பெண்...! - ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை பறித்துச் செல்லப்பட்ட பரபரப்பு பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற மர்ம வாலிபர், அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகையை பறித்துச்சென்ற வாலிபரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் வண்டிமேடு வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி நித்யா (28). இவர் நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் வண்டிமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இருந்த நிலையிலும் திடீரென நித்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துள்ளார்.

நகை பறிபோனதை உணர்ந்த நித்யா அதிர்ச்சியடைந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அங்கு திரண்டு வந்து வாலிபரை பிடிக்க முயன்றனர்.ஆனால், அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளை வேகமாக இயக்கி நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

பறிபோன 6 பவுன் நகையின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து நித்யா அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்ற வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, அவரை பிடிக்க காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம், வண்டிமேடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock crowded area woman screamed Thief thief What background incident where jewelry worth 5 lakhs stolen


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->