மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு என்ன...? - இன்று நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு...!
Madhurantakam Tarapuram by elections What position Marxist Communist Party dramatic decision state executive meeting held today
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளன.ஆளும் த.வெ.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கியுள்ளன.

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, தமிழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.இதனால் அந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
குறிப்பாக, தேர்தலில் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, யாருக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து நிர்வாகிகள் விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர்.இதனால் இன்று நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தின் முடிவு இடைத்தேர்தல் களத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூட்டணி கணக்குகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் நிலையில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அடுத்தகட்ட நகர்வு அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Madhurantakam Tarapuram by elections What position Marxist Communist Party dramatic decision state executive meeting held today