முடிவுக்கு வந்த இழுபறி! செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கில் திங்கட்கிழமை முடிவு! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரணை செய்யும் நீதிமன்றத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அவர் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ நீதிபதி சுந்தர் மற்றும் நீதிபதி சக்திவேல் ஆகியோர் அமர்வின் முன்பு நேற்று முறையிட்டார்.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விலகிய நீதிபதி சக்திவேல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை விசாரணை செய்யும் அமர்வு தொடர்பான முறையிட்டையும் விசாரிக்க மறுத்து இந்த வழக்கிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji bail plea case will be held on Monday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->