அடித்து ஆடும் செங்கோட்டையன்... 9-ந்தேதி செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலில் வெற்றிக்காக கட்சியை விட்டு விலகியவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும், அதற்காக 10 நாள் அவகாசம் தருகிறேன், இல்லையெனில் இதே கோரிக்கையை வலியுறுத்துபவர்களை ஒன்றிணைப்பேன் என அவர் எச்சரித்தார். மேலும், “எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன்” என்ற கூற்றும் பரபரப்பை தூண்டியது.

இதையடுத்து, திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், கட்சி அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு அ.தி.மு.க.வினரே பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், வரும் 9ஆம் தேதி செங்கோட்டையன் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sengottaiyan is going to make a big announcement on the 9th


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->