போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்க முடியாத நிலைமை... கதறும் நடிகர் பாலா!
Gandhi kannadi Actor bala
நடிகர் பாலா, திரையரங்குகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்க முடியாத நிலைமை குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
ஷெரிஃப் இயக்கத்தில் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்த ‘காந்தி கண்ணாடி’ படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் பாலா முதன்முறையாக நாயகனாக அறிமுகமாகியுள்ளார். வெளியீட்டுக்குப் பின் அவரது நண்பர்கள், ரசிகர்கள் பலரும் படம் பார்த்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
படத்தின் முதல் காட்சியை படக்குழுவினருடன் இணைந்து நடிகர் ராகவா லாரன்ஸும் பார்வையிட்டார். பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலா, “படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புவரை எங்களுக்கு கடினமான சூழல் இருந்தது. பல திரையரங்குகளில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. இதனால், சிலர் ‘காந்தி கண்ணாடி’ திரையரங்குகளில் ஓடவில்லை என நினைத்து திரும்பிச் சென்றுவிடுவார்கள். அந்த தடைகளையெல்லாம் கடந்து இன்று படம் வெளியானது. தற்போது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக தமிழக மக்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்.
லாரன்ஸ் சார் எப்போதும் ‘நீ ஹீரோடா’ என்று சொல்லி ஊக்குவிப்பார். இன்று திரையில் என்னை ஹீரோவாகப் பார்த்தபோது, நான் உண்மையிலேயே என்ன சொல்லுவது என்று தெரியவில்லை” என்று கூறினார்.
பாலா தெரிவித்த இந்த உணர்ச்சி பூர்வமான பேச்சு, திரையுலகில் புதிய பாதையை தொடங்கிய அவரது முயற்சியை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
English Summary
Gandhi kannadi Actor bala