உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களாகிய நாம் நமது மொழியையும் பண்பாட்டையும் விடமாட்டோம். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


லண்டன் நகரில் நடைபெற்ற “தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:“உலகின் எந்த மூலையில் சென்றாலும், தமிழர்களாகிய நாம் நமது மொழியையும் பண்பாட்டையும் ஒருபோதும் கைவிடமாட்டோம். அதேபோல, சுயமரியாதையும் சமத்துவமும் சமூகநீதியும் எப்போதும் நம் வாழ்வின் அடிப்படைக் கோட்பாடுகளாகவே இருக்கும்.

திராவிட இயக்கத்தின் சிந்தனையால் பெருமிதத்துடன் வாழ்கின்ற தமிழர்களை இங்கு சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழின் வளர்ச்சிக்கு தடை செய்ய நினைக்கும் எந்த முயற்சியும் ஒருபோதும் வெற்றியடையாது.

தமிழ்நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் தூதுவர்களாக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் திகழ்ந்து வருகின்றனர். சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள் மற்றும் அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.எனவே, இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும்” என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wherever we go in the world we Tamils ​​will never abandon our language and culture Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->