செங்கோட்டையனை சந்திக்கும் ஓபிஎஸ்!
OPS Sengottaiyan ADMK
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்தித்து பேசத் தயாராக உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்தபோது, நயினார் நாகேந்திரன் நல்ல மனம் கொண்டவர், அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள் என்றும் கூறினார். மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்புக்காக செங்கோட்டையன் 10 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதால், அந்த கால அவகாசம் முடிந்ததும் அவர் தன்னிடம் நேரடியாக பேசுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஓ.பி.எஸ். கூறினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவு தருவேன் என்றும் உறுதி அளித்தார்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.