காலியாகும் கொங்கு? இரண்டாவது நாளாக அதிமுக நிர்வாகிகள் மாஸ் ராஜினாமா!
ADMK Sengottaiyan EPS issue
கோபி அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நேற்று போலவே இன்றும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, கட்சியிலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான காலக்கெடுவை பத்து நாட்கள் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 6-ம் தேதி அவர் வகித்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் கோபி தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் நேற்று நம்பியூரில் கூடி, செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த அலையிலேயே இன்று மீண்டும் கோபி அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவிகளை விட்டு விலகி ராஜினாமா கடிதங்களை அனுப்பினர்.
ராஜினாமா செய்தோர், “அதிமுக தனது பழைய வலிமையை மீட்டெடுத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஆட்சியை உருவாக்க வேண்டும். கட்சி ஒன்றுபட வேண்டும். ஆனால் இந்த நல்ல எண்ணத்துடன் கருத்து கூறிய செங்கோட்டையனை நீக்கியது தவறு. அதற்கு எதிர்ப்பாக நாங்கள் பதவிகளை விட்டு விலகுகிறோம். கட்சி ஒன்றுபட்டால் மீண்டும் பொறுப்பில் நீடிப்போம்” என ஒருமனதாக தெரிவித்தனர்.
English Summary
ADMK Sengottaiyan EPS issue