அசுரன்’ புகழ் கென் கருணாஸ்... இயக்குநர் அவதாரம் எடுத்து ஹீரோவாக நடிக்கிறாரா...?
Asuran fame Ken Karunas he taking role director and playing hero
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் (2019) திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக அறிமுகமான 'கென் கருணாஸ்', தனது அசத்தலான நடிப்பால் பாராட்டுக்களை பெற்றார்.
அதன் பிறகு வாத்தி, விடுதலை பாகம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.

இதில் கென் கருணாஸ் இயக்கும் இந்த புதிய படத்தில், அவரே கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பள்ளிக்கூடத்தை மையமாகக் கொண்ட கதை இது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில், மலையாள முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஸ்ரீதேவி அப்பல்லா, அனிஷ்மா உள்ளிட்ட 3 கதாநாயகிகள் இணைகின்றனர்.
இதைத் தொடர்ந்து, இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
English Summary
Asuran fame Ken Karunas he taking role director and playing hero