குஜராத்தில் அந்தரத்தில் அறுந்து தொங்கிய ரோப்கார்: மலைக்கோயிலுக்கு சென்ற 06 பேர் உயிரிழந்த சோகம்..!
6 people killed in Gujarat ropeway collapse
குஜராத்தில் ரோப்கார் கயிறு அறுந்து விழுந்ததில் 06 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் பாவகத்தில் உள்ள மலை உச்சியில் புகழ்பெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல 2000 படிக்கட்டுகள் வழியாக செல்ல வேண்டும் அல்லது ரோப் கார் மூலம் செல்ல வேண்டும். தினமும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ரோப்காரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது,ரோப்கார் கயிறு அறுந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 06 பேர் பலியாகியுளள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர் வந்து உடலை மீட்டுள்ளனர்.

இந்த கோர் விபத்து சம்பவம் குறித்து பஞ்சமஹால் ஆட்சியர் கூறியதாவது:
ரோப்வே வழியாக மக்கள் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. ரோப்கார் கயிறு அறுந்து விழுந்ததில் 02 லிப்ட்மேன்கள், 02 தொழிலாளர்கள் மற்றும் இருவர் என 06 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்துக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளதாகவும், விபத்து குறித்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
English Summary
6 people killed in Gujarat ropeway collapse