சந்தனக் கடத்தல் கதையை சொல்லும் ‘விலயாத் புத்தா’...! பிருத்விராஜ் நடிப்பில் மிரட்டலான டீசர் வெளியீடு...! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் 'பிருத்விராஜ்'. இவர் கடந்த சில ஆண்டுகளில் வெற்றிகரமான படங்களை மட்டுமல்லாமல் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் போன்ற படங்களை இயக்கியும் சிறந்த இயக்குநராக வலம் வருகிறார்.

அதிலும் குறிப்பாக, மலையாள திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான எம்புரான் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது.தற்போது அவர் இயக்குநர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் 'விலயாத் புத்தா' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படம் சந்தனக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவான எழுத்தாளர் ஜி.ஆர். இந்துகோபனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. மேலும், கேரளாவின் மறையூர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான டீசரில் “குட்டி வீரப்பன்”, “புஷ்பா இன்டர்நேஷ்னல்”, “நான் லோக்கல்” என்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vilayat Buddha tells story sandalwood smuggling threatening teaser starring Prithviraj out


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->