தமிழ், பெங்காலி, ஹிந்தி நடிகைகளை வைத்து விபச்சார தொழில் செய்துள்ள ஹிந்தி நடிகை அனுஷ்கா கைது..! - Seithipunal
Seithipunal


மும்பையில் நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த அமோடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அனுஷ்கா மோனி மோகன் தாஸ் என்ற 41 வயது நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அடுத்த தானேயில் உள்ள காஷிமிரா பகுதியில் நடிகைகளை வைத்து விபசாரம் நடந்துவந்துள்ளதாக தெரியவருகிறது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த விபச்சார தொழில் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாடல் அழகியான அனுஷ்கா மோனி மோகன் தாஸ் இந்தி, பெங்காலி படங்களில் நடித்துள்ளார். சினிமா துறையில் மூன் தாஸ் என்று அறியப்படுகிறார். இவரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் போலி வாடிக்கையாளர் மூலம் மூன்தாசை தொடர்பு கொள்ள வைத்துள்ளனர். அப்போது மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மிரா ரோடு பகுதியில் இருக்கும் ஒரு மாலுக்கு வந்து தன்னை சந்திக்கும்படி அவர் கூறியுள்ளார்.

அதன்படி போலீசார் அனுப்பிய போலி வாடிக்கையாளர்கள் 02 பேர்  அங்கு சென்று நடிகை மூன் தாசை சந்தித்துள்ளனர். அப்போது அவர்களிடம்  உல்லாசம் அனுபவிக்க நடிகைகளை அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் இருந்து பணமும் வாங்கியுள்ளார்.

இதை அங்கு மறைந்திருந்து கண்காணித்த போலீசார் மூன் தாசை கையும், களவுமாக பிடித்துள்ளனர். அப்போது அவர் நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் பெங்காலி, தமிழ், தெலுங்கு நடிகைகள், டி.வி. நடிகைகளை அவர் விபசாரத்துக்கு பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. உல்லாசத்திற்கு நடிகைகளுக்காக ஏங்கும் செல்வந்தர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு, இந்த விபசார தொழிலை நடத்தி வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மூன் தாசை கைது செய்த போலீசார், அவரால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 02 நடிகைகளை மீட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் டி.வி. சிரீயல்கள் மட்டுமின்றி பெங்காலி சினிமாக்களிலும் நடித்து வந்ததாக மிரா- பயந்தர், வசாய்- விரார் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் மதன் பல்லால் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hindi actress arrested for using actresses for prostitution


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->