உங்கள் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள்... திமுகவை கண்டித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Aadhav Arjuna Condemn to DMK Govt mkstalin TVK Vijay
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தி.மு.க அராஜக அரசுக்கு எதிராக இயக்கம் கண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தபோது அதை தங்கள் அதிகாரம் கொண்டு அடக்க நினைத்தது அன்றைய ஆளும் அரசு. அந்த அதிகார சக்திகளின் ஆட்டத்திற்கு அடுத்தத் தேர்தலிலேயே முடிவுரை எழுதினார்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்று எங்கள் தலைவரும் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையுமான த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை தடுக்கும் நோக்கில் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு காவல்துறையின் மூலம் நெருக்கடி கொடுக்க முனைகிறது இன்றைய தி.மு.க அரசு.
மக்கள் தலைவராக திரு.விஜய் அவர்களுக்கு இருக்கும் பேராதரவை பொறுத்துக்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடாகவே அரசின் இந்த அதிகார அழுத்தத்தை பார்க்கவேண்டியுள்ளது.
ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்த அதிகார சக்திகளை மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். மக்களே மகத்தான ஆசான்கள்… அவர்களே உங்கள் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Aadhav Arjuna Condemn to DMK Govt mkstalin TVK Vijay