தவறான முடிவு... எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையை கண்டித்த சசிகலா!
Sasikala Sengottaiyan ADMK AMMK TTV EPS
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான செங்கோட்டையனின் பதவி நீக்கம் குறித்து கட்சியின் நிர்வாகம் எடுத்த முடிவு தவறானது என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறு குழந்தைத்தனமான செயல். இது அதிமுக வளர்ச்சிக்கும், கட்சியின் நலனுக்கும் சாதகமானதல்ல. அவர் எப்போதும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்தவர். அவரது எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் இத்தகைய நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இன்று கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். அவர்களுடைய எண்ணத்துக்கு நாம் என்ன பதில் தருகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். ஜெயலலிதா காலத்தில், கட்சியை விட்டு விலகியவர்களை கூட மீண்டும் அழைத்து வந்து சமாதானப்படுத்திய வரலாறு உள்ளது. சோமசுந்தரம் போன்றோருக்கு வாய்ப்பு அளித்து மீண்டும் கட்சியில் இணைத்தது அதற்குச் சாட்சி.
திமுகவை பலவீனப்படுத்துவதே அதிமுகவின் முக்கிய குறிக்கோள் ஆக வேண்டும். ஆனால் உள் பிரிவினை, பதவி பறிப்பு போன்ற முடிவுகள் அந்த குறிக்கோளை பின்தள்ளும். தொண்டர்களின் விருப்பத்தையும், கட்சியின் வலிமையையும் கருதி அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்" என சசிகலா தெரிவித்துள்ளார்.
English Summary
Sasikala Sengottaiyan ADMK AMMK TTV EPS