விடமாட்டேன்... இதான் முடிவு... செங்கோட்டையனின் அடுத்த மூவ் என்ன?
ADMK Sengottaiyan vs EPS
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் எனக் கோரி, எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார். இதையடுத்து திண்டுக்கலில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் எடப்பாடி அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன் பின், செங்கோட்டையன் கட்சி அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி அறிவிப்பு வெளியிட்டார். எனினும், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைக்கும் தனது முயற்சி தொடரும் என செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அவர் பண்ணை வீட்டில் தொண்டர்கள் திரளத் தொடங்கினர். நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூட அவரை சந்திக்க வந்தனர்.
கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். அதன்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
அதிமுக மீண்டும் வலுவடைந்து ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என அவர் தெரிவித்தார்.