பொழுதணிக்கும் ரஸ்யா, அமெரிக்கா, அம்பானி தானா? ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும் பேசுங்க - மதுரை எம்பி-க்கு வந்த கண்டனம்!
Prashanth rangasamy condemn to Madurai MP
மதுரை எம்பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது 13 சதவீதம் குறைந்திருக்கிறது.
அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், போன்றவை குறைத்துள்ளன.
ஆனால் அம்பானி, நயாரா எனர்ஜி போன்ற தனியார் நிறுவனங்கள் வாங்குவது குறையவில்லை.
வர்த்தக பயண்களை நாடு இழப்பதும், நண்பர்கள் அனுபவிப்பதும் தான் மோடி அரசின் கொள்கை" என்று விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, "மதுரைல ரோடு பூராம் தோண்டி போட்டு மக்கள் படாத பாடு படுறாங்க சார் . மேயர் கணவரை கைது செய்யும் அளவுக்கு பகல் கொள்ளை . அடிப்படை வசதிகள் கூட பல இடங்களில் இல்லை .
பொழுதணிக்கும் ரஸ்யா , அமெரிக்கா , அம்பானி , அதானினே பேசுறீங்க -
என்னைக்காவது உங்கள ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும் பேசுங்க" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Prashanth rangasamy condemn to Madurai MP