ரூ.10 லட்சம் பரிசு வைத்த மாவோயிஸ்ட் தளபதி துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொலை...! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் இருக்கும் மாவோயிஸ்டுகளை சரண்டா காட்டுப்பகுதியில், பாதுகாப்பு படையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அச்சமயம்,  பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மண்டலத் தளபதி 'அமித் ஹன்ஸ்தா' என்கிற அப்தான் மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவரை பிடிக்க உதவும் தகவல் வழங்குபவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும், மோதல் நடந்த இடத்திலிருந்து  வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதுமட்டுமின்றி, துப்பாக்கி சண்டையின் போது மற்ற மாவோயிஸ்ட்கள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றதால், அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இது தற்போது அம்மாநிலத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maoist commander carrying reward of Rs 10 lakhs shot dead gunfight


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->