பள்ளிபாளையம் சாலையில் பயங்கர தீ விபத்து! பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்...!
Terrible fire accident on Pallipalayam road Goods worth lakhs rupees damaged
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், உணவகம் முழுவதும் எரிந்து நாசமானது.

மேலும், கீழ்காலனி பகுதியில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அந்த உணவகத்தில், புகைபோக்கி வழியாக பறந்த தீ வேகமாக பரவி கூரையையும் சூழ்ந்தது.
அங்கு உடனடியாக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வெளியேறி உயிர் தப்பினர்.இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
மேலும், அப்பகுதி மக்கள் கூட இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.அதுமட்டுமின்றி, இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானாலும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.மேலும், சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Terrible fire accident on Pallipalayam road Goods worth lakhs rupees damaged