ரஷ்யாவில் 100% வெற்றிகரமான புற்றுநோய் தடுப்பூசி ...! விரைவில் பொதுமக்களுக்கு...?
100 percentage successful cancer vaccine in Russia Soon public
உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரைக் பாதித்து வரும் புற்றுநோய்க்கு எதிராக புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. மேலும், ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ‘என்ட்ரோமிக்ஸ்’ எனும் புற்றுநோய் தடுப்பூசி, சோதனைகளில் 100% செயல் திறனை காட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தடுப்பூசி, புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும், ரஷ்ய சுகாதார அமைச்சகம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விரைவில் பொதுப் பயன்பாட்டிற்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.இதனிடையே,கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே எம்.ஆர்.என்.ஏ நுட்பமே இதில் பயன்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்படும் இந்த அடுத்த தலைமுறை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு போல ஆரோக்கிய திசுக்களை பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், சோதனைகளின் போது கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
100 percentage successful cancer vaccine in Russia Soon public