திரை உலகில் தன் தடத்தை பதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்....! சைமா விருது கைவசம்...!
Bhagyashree borse who has made her mark film world She has Siima Award
தென்னிந்திய திரைப்பட உலகில் ‘மிஸ்டர் பச்சன்’, ‘கிங்டம்’ போன்ற படங்கள் மூலம் அறிமுகமான நடிகை 'பாக்யஸ்ரீ போர்ஸ்', தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.மேலும், ‘மிஸ்டர் பச்சன்’ படத்தின் பாடல்கள் வெளியானதும், அதிலுள்ள அவரது நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர் தற்போது ராம் பொத்தினேனியுடன் ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்திலும், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘காந்தா’ படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், 1950களின் பின்னணியில் உருவாகும் ‘காந்தா’ படத்தில் பாக்யஸ்ரீ, நெகிழ்ச்சியையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதுமட்டுமின்றி,சிறந்த நடிகையாக உயர வேண்டும் என்ற கனவுடன் பாடுபடும் அவர், சைமா விருதில் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றிருப்பது, அவரது பயணத்தின் தொடக்கமே. பெரிய திரையில் அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Bhagyashree borse who has made her mark film world She has Siima Award