அச்சுறுத்தல் ...! அரிவாளுடன் வீடியோ பதிவு செய்த 6 பேர் கைது...!
Threat 6 people arrested for recording video sickle
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே அம்பலச்சேரியை சேர்ந்த கணேசன் மகன் 34 வயதான ராமசுப்பிரமணியன். இவரும், இவரது நண்பர்களும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து,மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், வீடியோவில் ஈடுபட்ட ராமசுப்பிரமணியன் உட்பட நாசரேத் ஞானராஜ் நகரைச் சேர்ந்த தங்கத்துரை (24), சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு பகுதியை சேர்ந்த அம்பலச்சேரி தளவாய்பாண்டியன் (26),மாணிக்கராஜா (24), இசக்கிமுத்து (19), மீனாட்சிசுந்தரம் (21) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
English Summary
Threat 6 people arrested for recording video sickle