கேரளாவில் கணவனை குத்திக்கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்!
kerala illegal affair murder
கேரளாவில் கணவனை மனைவியின் கள்ளக்காதலன் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதூரை சேர்ந்த ஷியாம் சுந்தர், தனது மனைவியுடனும் குழந்தையுடனும் வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரது மனைவியும் குழந்தையும் தனேஷ் என்ற நபருடன் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஷியாம் சுந்தரும் தனேஷும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்தன. அந்த விரோதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஓணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனேஷ், பின்னர் ஷியாம் சுந்தரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கோபமடைந்த தனேஷ், கத்தியால் ஷியாமை குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் இரவு 11.30 மணியளவில் நடைபெற்றது.
உடனடியாக ஷியாமை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உடற்கூறாய்வு செய்ய பரிப்பள்ளி மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல் அனுப்பப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கொலைச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனேஷை கைது செய்ய போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
English Summary
kerala illegal affair murder