உலகின் முதல் 'ஸ்கை ஸ்டேடியம்'; 350 மீட்டர் உயரத்தில் கால்பந்து போட்டி; எந்த நாட்டில் தெரியுமா..? - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியாவின் நியோம்-இல் அமையவுள்ள கால்பந்து மைதானமான 'நியோம் ஸ்டேடியம்'. அந்நாட்டின் லட்சிய திட்டமாகும். இது பாலைவனத்தின் தரையில் இருந்து சுமார் 350 மீட்டர் உயரத்தில் அமையவுள்ளது. லகின் முதல் "ஸ்கை ஸ்டேடியம்" என்ற பெருமையையும் பெறவுள்ளது..

இந்த மைதானம் சுமார் 46,000 பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் கட்டப்படுகிறது. சூரிய மற்றும் காற்றாலின் ஆற்றல் மூலம் இதன் மைதானம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2034-ஆம் ஆண்டு பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளை நடத்த இந்த மைதானம் பயன்படுத்தப்படும் வகையில் வேலைகள் நடைபெற்று வருகிறது.  இதன் கட்டுமானப் பணிகள் 2027-இல் தொடங்கி 2032-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதியின் நியோம் நகருக்குள் அமையவுள்ள நேரியல் ஸ்மார்ட் சிட்டியான 'தி லைன்' உடன் ஒருங்கிணைக்கப்பட்டு, எதிர்கால கட்டிடக்கலை மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இந்த "ஸ்கை ஸ்டேடியம்" வடிவமைக்கப்படவுள்ளது. இந்த மைதானத்தின் உயரம் மற்றும் இடம் காரணமாக பாதுகாப்பு மற்றும் அணுகல் தன்மைக்கு புதுமையான தீர்வுகளைக் கோரும் பொறியியல் சவால்களை இந்த திட்டம் எதிர்கொள்ள உள்ளது.

இருப்பினும், சவுதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் ஒரு அடையாளமாக இந்த "ஸ்கை ஸ்டேடியம்" இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The worlds first sky stadium at an altitude of 350 meters


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->