கரையை கடக்கும் ‘மோந்தா’ புயல்!
Cyclone Montha to cross Kakinada
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, 'மோந்தா' புயல் அடுத்த 2 மணி நேரத்திற்குள் கரையைக் கடக்கவுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவின் தெற்குப் பகுதியில் புயல் நிலப்பரப்பைத் தாக்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.30 மணியளவில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடந்த 6 மணி நேரமாக ‘மோந்தா’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மாலை 5.30 மணியளவில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாகவும், அடுத்த 2 முதல் 3 மணி நேரத்துக்குள் முழுமையாக நிலப்பரப்பைத் தாக்கி கடந்து விடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கரையோர கிராமங்களில் முன்கூட்டியே மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சேவை குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
English Summary
Cyclone Montha to cross Kakinada