'புரோ கோட்' தலைப்பில் சர்ச்சை வெடிப்பு! - ரவி மோகன் படத்துக்கு டெல்லி ஹைகோர்ட்டின் அதிரடி தடை உத்தரவு - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகர் ரவி மோகன், சமீபத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்”-ஐ தொடங்கி, அதின் முதல் முயற்சியாக கார்த்திக் யோகி இயக்கத்தில் “புரோ கோட்” (BRO CODE) எனும் புதிய படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஆனால், எதிர்பாராத திருப்பமாக, டெல்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ‘Indospirit Beverages’, “புரோ கோட்” என்பது தங்களது வர்த்தக முத்திரை பெயர் என்றும், அந்த தலைப்பை திரைப்படத்திற்குப் பயன்படுத்துவதால் தங்களது வணிக உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வழக்கு தொடுத்தது.

இதற்கு பதிலளித்து, ரவி மோகன் ஸ்டுடியோஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆரம்ப விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு ரவி மோகனுக்கு சாதகமான உத்தரவு வழங்கியது.

ஆனால், தற்போது அந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிபதி தேஜஸ் கரியா தலைமையிலான அமர்வு, “புரோ கோட்” என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால், ரவி மோகனின் புதிய படம் வெளியீட்டுக்கு முன்பே சட்ட சிக்கலில் சிக்கி விட்டது என்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy erupts over title bro Code Delhi High Court orders stay on Ravi Mohans film


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->