ரெட்ரோ லுக்கில் 'தல' தோனி மற்றும் சி.எஸ்.கே. இளம் வீரர்கள் இணையத்தில் வைரலாகியுள்ள புகைப்படம்..!
A picture of MS Dhoni and the CSK young players in a retro look has gone viral on the internet
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதற்கு முன்னர், சென்னை அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா டிரேட் மூலம் ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளார். சஞ்சு சாம்சனை சென்னை அணி ஆர்.ஆர் அணியில் இருந்து டிரேட் செய்துள்ளது.
அத்துடன், நடந்து முடிந்த மினி ஏலத்தில், ஐபி.எல் வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்றை சென்னை அணி செய்துள்ளது. அதாவது, பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய அன்கேப்ட் வீரர்களை தலா 14.20 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது. அத்துடன் சி.எஸ்.கே அணி ஏலத்தில் சொதப்பியுள்ளதாகிட்டவும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
பலர் 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வீரர்களை எடுத்துள்ளதாகவும் பாராட்டவும் செய்துள்ளனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரெட்ரோ லுக்கில் சி.எஸ்.கே. வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக தல தோனியின் படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
English Summary
A picture of MS Dhoni and the CSK young players in a retro look has gone viral on the internet