2026 டி20 உலக கோப்பைக்கான அணியில் ஜனவரி 31-ஆம் தேதி வரை மாற்றம் செய்து கொள்ளலாம்; ஐசிசி அறிவிப்பு..!
The ICC has announced that changes to the squad for the 2026 T20 World Cup can be made until January 31st
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 07-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 04 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடுகளுக்கும் தொடருக்கான அணியை அறிவித்து வருகின்றனர்.
இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே அணியின் விபரத்தை அறிவித்துள்ளனர். ஏனைய நாடுகள் இன்னும் அறிவிக்கபடாமல் உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 31-ஆம் தேதி வரை தங்கள் அணியில் மாற்றங்களைச் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
English Summary
The ICC has announced that changes to the squad for the 2026 T20 World Cup can be made until January 31st