ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு விருந்து வைத்த பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்..!
Prime Minister Anthony Albanese hosted a New Year dinner for Australian and English cricketers
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 04 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 05-வது டெஸ்ட் போட்டி வரும் 04-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்து உற்சாகப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் உற்சாகமாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்திப்பு பற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது:
''இது வேறு எந்தத் தொடரையும் போலல்லாத ஒரு ஆஷஸ் தொடராக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னி மைதானம் ஆஸ்திரேலிய ரசிகர்களும் பார்மி ஆர்மியும் மெக்ராத் அறக்கட்டளையின் சிறந்த பணியை ஆதரிக்கும் இளஞ்சிவப்பு கடலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குப் போவோம்'' என பதிவிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Anthony Albanese hosted a New Year dinner for Australian and English cricketers