கெனிஷாவுடன், ரவி மோகன் புத்தாண்டு கொண்டாட்டம்; நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரல்..!
A picture of Ravi Mohan and Kenisha being intimate during the New Years celebration has gone viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ரவி மோகன். இவர் ஏற்கனவே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து 02 ஆன் குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகள் இடையே கருது முரண்பாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த விவாகரத்து வழக்கில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி அவதூறு கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இரு தரப்பினரும் பரஸ்பரமாக இருப்பதாகவும், எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கி உள்ளனர்.

இவர்களின் விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் தொடர்பில் இருப்பதை செய்திகள் பரவலானது. அஅதை ஆர்த்தி அவர்களும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இவ்வாறான சர்ச்சைக்கு மத்தியிலும் ரவி மோகன் - கெனிஷா ஜோடி அணைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வது, தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது என ஒன்றாக ஜோடியாக இணைத்து ஊர் சுற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் இருவரும் நெருக்கமாக இருப்பதும் இன்னும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
English Summary
A picture of Ravi Mohan and Kenisha being intimate during the New Years celebration has gone viral