கண்ணகி நகரில் வசிக்கும் மக்களின் அவல நிலையை பாருங்கள்... அதிர்ச்சி வீடியோ!
arapor iyakkam kannaki nagar
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, கண்ணகி நகரில் வசிக்கும் மக்களின் அவல நிலையை பாருங்கள். அரசாங்கம் போட்ட சாலைகளின் நிலையையும், அரசாங்கம் கட்டிக் கொடுத்த இந்த வீடுகளின் மோசமான நிலையையும் புகாராக அளித்தால் அதற்கு தீர்வு காண்பதில் கவனத்தை செலுத்தாமல், விஷயத்தோடு போடுறியா, விஷம் வைத்து போடுறியா என்று வண்டுமுருகன்கள் கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
வீடே இடிந்து விழுந்தாலும் மக்கள் வாய் மூடி மவுனம் காக்க வேண்டுமா என்ன? இது ஜனநாயக ஆட்சியா இல்லை சர்வாதிகார ஆட்சியா? மக்கள் புகார்களுக்கு கேலியும் கிண்டலும் தான் பதிலா? என்று கேள்வி எழுப்பி ஒரு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
மேலும் அதன் மற்றும் ஒரு பதிவில், "பனையூர் முதல் மகாபலிபுரம் வரை கிட்டத்தட்ட 32 கிமீ தொலைவிற்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான வகையில், எந்த நேரத்திலும் வண்டிகள் மீது விழும் வகையில், திமுக கொடி கம்பங்கள் சாலையின் குறுக்கே நடப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சியே அப்பட்டமாக அதை மீறுவது அவர்களின் சர்வாதிகார மனநிலையை காட்டுகிறது. யார் செத்தால் எனக்கென்ன.. கட்சி விளம்பரம் தான் முக்கியம் என்று செயல்படும் இந்த சமூக விரோதிகளின் செயல்களுக்கு முடிவே இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
arapor iyakkam kannaki nagar