மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா.. தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை!
thanjai local holyday nov 1
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா பங்கஜம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலை நிர்மாணித்து, சோழப் பேரரசின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிகழாண்டு 1040வது சதய திருநாள் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் நகரிலும் பெரியகோயில் வளாகத்திலும் பல்வேறு ஆன்மிக, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அதனை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமையன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்த உள்ளூர் விடுமுறை, பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படாது என்றும், இதற்கான மாற்று வேலை நாளை மாவட்ட நிர்வாகம் தனியாக அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் முழுவதும் ராஜராஜ சோழனின் நினைவாக அலங்காரம், விளக்கேற்றம், இசைநிகழ்ச்சி, பூஜைகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சதய விழா மாநிலம் முழுவதும் சோழர் வரலாறு மற்றும் தமிழர் பண்பாட்டை போற்றும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
English Summary
thanjai local holyday nov 1