பொள்ளாச்சி: மயானத்தில் தோண்டப்பட்ட 20 சவ குழிகள்... காரணத்தை கேட்டு அதிர்ந்த மக்கள்!
pollachi sudukadu issue
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட சவ குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி–உடுமலை சாலையில் உள்ள இந்த மயானத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. சமீபத்தில், ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கு நடைபெற உறவினர்கள் அங்கு சென்றபோது, பல புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுவாக இறப்பு நிகழ்ந்த பிறகே, குடும்பத்தினர் மயானத்தை பராமரித்து வரும் நபர்களிடம் குழி தோண்ட ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் ஒரே நாளில் ஒருவரின் உடல் மட்டுமே அடக்கம் செய்யப்பட இருந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டிருப்பது சந்தேகத்தையும் சர்ச்சையையும் தூண்டியுள்ளது.
பொதுவாக குழிகளை தோண்ட ஆட்கள் கிடைக்காததால், மயான பராமரிப்புப் பொறுப்பில் இருந்த பாபு என்பவர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குழிகளை தோண்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.