13, 14 வயது சிறுவர்களால் ஓட்டு போட முடியாது - விஜய் கட்சியை கலாய்த்த திமுக அமைச்சர்!
DMk Minister TVK Vijay
தமிழக வனம் மற்றும் கதார்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், "யாரும் மாநாடு நடத்தலாம், ஆனால் அதில் பங்கேற்கும் சிறுவர்களால் தேர்தலில் ஓட்டு கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட இயக்கம் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழிகாட்டுதலால் துவங்கி, இன்று திமுகவின் வழியாக தொடர்கிறது என்றார். விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரலாம், ஆனால் அவர்களால் உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
எம்ஜிஆர் கூட திமுகவில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகே தனிப்பட்ட அரசியல் வெற்றியைப் பெற்றார். அதேபோல விஜயகாந்த் ஒரு காலத்தில் 25 லட்சம் பேருடன் மாநாடு நடத்தினார். பின்னர் அந்த கூட்டம் 15 லட்சமாகக் குறைந்தது.
"மாநாடு நடத்துவது சுலபம். ஆனால் அங்கு பங்கேற்கும் 13, 14 வயது சிறுவர்களால் ஓட்டு போட முடியாது. அவர்கள் சினிமா பிரபலம் காரணமாகவே வருகிறார்கள். இதனால் தேர்தல் வெற்றி உறுதி ஆகாது. திடீரென வந்து அரசியலில் பெரிய மாற்றம் செய்ய முடியாது" என்று ராஜகண்ணப்பன் விளக்கமளித்தார்.