மும்பையில் 23 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து! ஒரு பெண் பலி... பலர் படுகாயம்!
mumbai apartment fire accident
மகாராஷ்டிர மாநிலம் மும்பை தஹிசர் பகுதியில் உள்ள 23 மாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
பிற்பகல் 3 மணியளவில் குடியிருப்பின் ஏழாவது மாடியில் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். அடர்ந்த புகை காரணமாக குடியிருப்பில் இருந்தவர்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகினர்.
மீட்பு நடவடிக்கை சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. மாலை 6.10 மணிக்குள் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 36 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
காயமடைந்த 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நாலு வயது சிறுவனின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
mumbai apartment fire accident