டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவி நீக்கம்; புதிய அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சில மையங்களுக்கு வினாத்தாள்கள் தாமதமாகச் சென்றது போன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்றும், இதற்கான புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அத்துடன், வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 13, 2026 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்றைய தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Venkatapriya IAS has been appointed as the new Examination Controller of TNPSC


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->