திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் கிடந்த மூன்று பழங்கால கற்சிலைகள் மீட்பு: சுற்றியுள்ள கிராமமே திரண்டதால் பரபரப்பு..!
Three ancient stone idols found in the Cooum river near Thiruvallur have been recovered
திருவள்ளூர் அருகே உள்ள, கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கூவம் ஆற்றில் மூன்று கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூவத்தில் இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் பழங்கால 03 கற்சிலைகள் ஆங்காங்கே கிடப்பது கண்டுள்ளனர்.
இது குறித்து உடனடியாக கிராம மக்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவல் பரவியதையடுத்து, சத்தரை, கடம்பத்தூர், மப்பேடு, கீழச்சேரி, கூவம், பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர். இந்த அந்த கோவர் ஆற்றுப் பகுதியில், பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாசில்தார் பாலாஜி உத்தரவின்படி, வருவாய்துறை அதிகாரிகள் சென்று கூவம் ஆற்றில் கிடந்த சுமார் 03 முதல் 04 அடி உயரம் கொண்ட பழங்கால கற்சிலைகளை மீட்ட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த சிலைகளை திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள காப்பகத்தில் பத்திரமாக வைத்தனர்.
மீட்கப்பட்ட இந்த சிலைகளின் பெயர் என்ன, எந்த காலத்து சிலைகள் என்பது போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. குறித்த சிலைகளை ஆய்வு செய்த பின்னர்தான் கற்சிலையின் ஆண்டுகள் தெரியவரும் என்று தாசில்தார் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்றில் 50 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் கூவம் ஆற்றில் மேலும் சிலைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
English Summary
Three ancient stone idols found in the Cooum river near Thiruvallur have been recovered